Author Topic: "ம்"  (Read 102 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
"ம்"
« on: January 27, 2025, 03:21:56 PM »
நிலவின் புன்னகை
பெய்திடும் ஓர் இரவில்
இதயத்தின்
சொர்க்கத்தில்
வசந்த மழை பெய்தது

என்றும்
அவளுக்காக மட்டுமே
காத்திருக்கும் நாட்களில்
ஒரு குறுந்செய்தி
என்னுள் முன்முறுவல்
கொண்டு வந்தது

மிகுந்த ஆசையுடன்
கண்களில் ஆனந்த நீர்
எட்டிப்பார்க்க
என்னால்
நம்ப முடியவில்லை

நேரில் நிறைய
பேசும் போது கூட
அவள்  கை விரல்கள்
மற்றும் கால்விரல்கள்
அவசரமாக வரைந்து
கொண்டிருக்க வேண்டும்

காதலில்
சிக்கியபின்
அவள் சொல்வதைக் கேட்க
அவ்வளவு
ஆனந்தமாய் இருக்கும்

மனஓட்டத்தை
சிறிது  நிறுத்தி
குறுஞ்செய்தி
என்னவா இருக்கும்
யோசனையில்
கைகள் படபடக்க
தொலைபேசி லாக்
திறக்க மறுக்கிறது
சிறிது தவிப்புக்கு பின்
திறந்தது
அவள் செய்தி
"ம்"

அந்தநொடி
என்னை சுற்றி சொர்கம்
கவர்ந்ததை போல்
உணர்ந்தேன்

என்றோ அவளுக்கு
நலமா என்று அனுப்பிய
குறுஞ்செய்திக்கு
பதிலாய்

திருக்குறளுக்கு பின்
அதைவிட சிறியதாய்
ஆயிரம் அர்த்தங்களை
உள்ளடக்கியது
அவளது
"ம்"

****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "