Author Topic: கிறுக்கல்கள்  (Read 7031 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #15 on: October 27, 2023, 08:11:19 PM »
புரிந்தது கொள்ளும் வரை

எழுதுகோல் எடுத்து
எழுத நினைத்த போது
யோசித்தேன்

எழுதுவது
ஓரிருவரி  கவிதையா ?
இல்லை
ஒருபக்க கவிதையா ?

எழுதுவது
படித்து புன்னகைக்கவா
இல்லை
பிறர் படித்து
அழுது கொண்டிருக்கவா

எழுதுவது

என் வாழ்க்கையையா
இல்லை
பிறர்
வாழ்க்கையையா

எழுதுவது
படிப்பவர்
பொருளறியவா?
இல்லை

வெறும் வார்த்தை
மட்டும் படித்து
கடந்து செல்லவா ?

புரியாதொன்றை
புரிந்தது கொள்ளும் வரை

இடைவெளி விட்டு
நிற்கிறது
என் எழுதுகோலும்
காகிதமும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #16 on: November 01, 2023, 01:57:05 PM »

தூறும் மழை
மண்ணின் மீது
காதல் கொண்டு வருகையில்
இடையில் மரக்கிளைகளில் உள்ள
இலைகளின் மேல் தங்கி விடுகிறது
அது
மரத்தின் இலைகளுக்கு  வரமா ?
இல்லை அதற்கு சுமையா ?
இல்லை மண்ணிற்குதான் சாபமோ ?

***Joker***
« Last Edit: November 01, 2023, 02:54:29 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #17 on: November 14, 2023, 04:10:26 PM »
நீ
என் அருகில் இல்லாவிட்டாலும்
என்னுடன் இருக்கிறாய்...
உடலால் நாம் தொலைவில் இருந்தாலும்,
மனதில் எப்போதும் நெருக்கமாகவே இருக்கிறோம்.

நான் உன்னை
எவ்வளவு நேசிக்கிறேன்
தெரியுமா?

வாழ்க்கையின் பாதையில்
ஆழமாக இறங்கிய வேர் நீ,
உன் மீதான என் காதல்
மிகவும் ஆழமானது

நீயே உயிரும் வாழ்க்கையும் என்பதை
உணர்ந்த தருணத்தில் என் கண்கள்
மகிழ்ச்சியில் நிறைந்தன

உன்னுடனான என் சண்டைகளில்
நீ இல்லாத வாழ்க்கை
எவ்வளவு நரகம் என்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு சண்டையின் முடிவிலும்
நிறைய
அன்பும் கனவுகளும் இருக்கும்.

உன்னுடைய சிறிய உலகத்தில்
எனக்கு நிறைய சந்தோஷம் உண்டு,

வேறு யாரோ பேசும் போது கூட
நான் இவ்வளவு சந்தோசமாக இருந்ததில்லை,
உன் குரல் கேட்டால்,
என்னையறியாமல் சிரித்தேன்,
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

சில நேரங்களில்
என்னை விட மகிழ்ச்சியாக
யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

எவ்வளவு வலித்தாலும்,
காதலால் விலகாமல்
உன்னை நேசிக்கும்
உன் இதயத்தின் மீது
எனக்கு மிகுந்த அன்பு உண்டு...

***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #18 on: November 16, 2023, 08:30:38 PM »
சண்டைக்குப் பிறகு
நீ மௌனமாய் இருக்க வேண்டும்
என நானும்
நான் மௌனமாய் இருக்க வேண்டும்
என நீயும்
பரஸ்பரம்  நினைக்கிறோம்

இந்த மௌனம் நீளும் எனில்
கடைசியில்
இப்படி ஒரு உறவா என்று
யாரும் வாயடைத்துப் போகாத நாள் வரும்.
அப்போது ஒருவரை ஒருவர்
இழந்திருப்போம்,
திரும்ப வரமாட்டோம்..

நம்மிடையே அப்படி
ஒரு நிலை வரக்கூடாது என்றுதான்
ஆசை கொள்ள முடியும்
விதி என்ற ஒரு வார்த்தையில்
எல்லாம் முடிந்துவிடும்

அடுத்தவர்களுக்காய்
வாழ்ந்து
மற்றவர்களை போல
வாழ்ந்து
சலித்து விட்டது

என்னிலுள்ள நான்
யாரென்று மறந்ததது போல தோன்ற
இனியுள்ள வாழ்க்கையிலேனும்
நான் யாரென்றே உண்மை அறியும் வகையில்
வாழ்வு அமையும் என்ற
எதிர்பார்ப்பில் தொடர்கிறேன்
இவ்வாழ்வை

***JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #19 on: November 17, 2023, 07:26:46 PM »
வாழ்நாள் முழுவதும்
கனவு கண்டவர்கள்
ஒரு நொடியில்
பிரிந்து போகலாம்
அல்லது
நெருங்கி வரலாம்

சூழ்நிலையும்
சுயநலமும்
பெரும்பாலும்
அதன் சங்கிலிகளை
உடைக்கிறது.

எதுவும் தனக்குச்
சொந்தமாக வேண்டும் என்பதில்
ஆண்கள்
 சுயநலவாதிகள்

அதற்காக
எதையும் முயற்சி செய்வேன் எனில்
அதில் வாக்குறுதியும் ஒன்று

யாருடைய தவறுமில்லை
சில வாக்குறுதிகளை
நிறைவேற்ற
சூழ்நிலைகள்
ஒத்துக்கொள்ளவில்லை
அவ்வளவுதான்

அதைப் புரிந்து கொண்டால்
எல்லாம் சரியாகிவிடும்.
உறவுகளை காக்க

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #20 on: November 21, 2023, 01:58:03 PM »
முதல் முத்தம்

முதல் முத்தம்
எனக்கு நினைவில்லை
ஆனால்
என்னை கைகளில்
ஏந்தி குடுத்த
என் தாய்க்கு
இனித்திருக்கும்

இரண்டாம் முத்தம்
தன்னை என்னில் கண்ட
என் தந்தை
கொடுத்திருக்க கூடும்

மூன்றாம் முத்தம்
என் பாட்டி
தன் மகனை
மீண்டும் குழந்தாய்
கண்ட நொடி
நினைத்து
பூரித்து கொடுத்திருக்க கூடும்

இன்னும் பல
தாயையும் சேயையும்
காண வந்த உறவுகள்
குழந்தை என
கொஞ்சி கொஞ்சி
கொடுத்திருக்க கூடும்

ஆனால்
அனாதையாய்
விட பட்ட குழந்தைக்கு
யார் கொடுத்திருப்பார்
முதல் முத்தம் ?

***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #21 on: November 29, 2023, 05:16:25 PM »
பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலை

யாழிசை
வந்த வழி
நான் தேட
இடையில்  நீ
என் இதயத்தில்
நுழைந்ததை
நானறியேன்

ஏழு சுரங்களில்
அடங்காத
தேனிசை நீ
உன் குரல் வந்த திசை
என் வாழ்வின்
மாறுதலுக்கான விசை

இதழ்கள் உதிர்த்திடும்
புன்னகையில்
வெட்கி தலைசாய்ந்தன
சோலையின் பூக்கள்

பூக்களை சுற்றிவரும்
வண்டுகள் போல
உன்னை சுற்றிவரும்
என் கண்கள்

பூ வை  பறிக்க
ஆசை கொண்டு
சுற்றிவரும் பலர் இருக்க
விழியினில் காதல் ஏந்தி
இதழ்களில் புன்னகைக்கொண்டு
தென்றல் காற்றின்
சுகமான தழுவதிலில்
வேறென்ன கேட்டுவிட போகிறேன்
சொல்லிவிடேன்
உன் காதலை
என்னிடம்

***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #22 on: November 29, 2023, 07:41:07 PM »
எவ்வளவு வெட்டினாலும்
வேர் நீரை தேடி
ஓடுமாம்

அது போல தான்
நீ
எவ்வளவு தூரம்
போனாலும்
உன்னை சுற்றியே
என் நினைவுகள்
சுழலும்

சில
வார்த்தைகளை விட
கூர்மையானது
சிலரது
மௌனங்கள்

நீயும் நானும்
இருந்தபோது
பல நாளைகள் இருந்தன
ஆனால்
இன்று
நேற்று மட்டும்
மிச்சம்

நெருப்பு
எரியும் போது
எஞ்சியிருப்பது
ஒரு கைப்பிடி சாம்பலாகும்.
வாழ்நாள் கனவுகளும்
அதில்
அடங்கியிருக்கும்

கணித புத்தகத்தில்
பெறுக்கல்களும், கூட்டல்களும்
கழித்தலும் இருக்கும்
எதற்கும் பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தாத அமைதியாய்
இருப்பது
பூஜ்யம்
உடன் எண் இருந்தால் மதிக்க படும்
அப்படி தான் இன்று
நான் நீயில்லா
பூஜ்யமாய்

உன் மடியில்
என் தலை சாய்க்க
என் இதயம் ஏங்குகிறது

இந்த எல்லாம் தெரிந்த
நான்கு சுவர்களும் கூட
என் துக்கங்களை
பார்த்து மௌனமாய் இருக்கிறது

இப்போது
என் இமைகள்
உறக்கத்தை நெருங்க
ஆரம்பித்து விட்டது

மீண்டும் விழித்தால்
நீ இருப்பாய் எனில்
விழி திறக்கக்கூடும்

***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #23 on: December 09, 2023, 12:57:02 PM »
மனிதம்
மனிதன்
மறந்து காலங்கலாயிற்று

அவ்வப்போது
அதன் பொருள் உணர செய்ய
வரும் காலம் தான்
மழை காலம்

மென்று தின்ற
சாக்லேட்டின் உறை
ரோட்டில் வீசி எறிவதும்

வீட்டில் உள்ள குப்பைகளை
பிளாஸ்டிக் பைகளில்
வண்டியில் இருந்தே
குப்பை தொட்டியை நோக்கி
வீசுகையில் ரோட்டில்
சிதறும் போதும்

ஆணாய் பிறந்ததால்
இயற்கை உபாதையை கழிக்க
உலகமே தன் வசமாய்
எண்ணும் போதும்

பேருந்தில் பயணிக்கையில்
எச்சிலை ரோட்டில்
எவன் மண்டையில் விழுந்தால்
என்ன என்று எண்ணி
துப்பும் போதும்

தலைக்கவசம்
காவல்காரர் கண்காணிக்கும் போது
அணிந்தால் போதும் என்று
எண்ணும்போதும்

அதிவேக வாகனம்
சக பயணியை அச்சுறுத்தி
ஓட்டும்போதும்

மனிதம்
ஏனோ முக்காடிட்டு
ஒளிந்து கொள்கிறது

பேரிடர் காலங்களில்
ஓரிரு நாட்கள்
மனிதம்
மனிதனில்
விழித்து கொள்கிறது

***Joker**

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #24 on: December 11, 2023, 08:45:26 PM »
வெள்ளைக்காரன்
பொய் சொல்ல மாட்டான்
என்பது போல
படித்தவர்கள்
நேர்மையாகவும், ஒழுக்கமாகவும்
இருப்பார்கள் என்பது
நகை முரண்

வாய்ப்பு இருந்தும்
தவறு செய்யாதவனை
போற்றாலாம்

அடி உதவுவது போல
அண்ணன் தம்பி
உதவ மாட்டான்
என்பார்கள்
அதுபோல
சில நேரம்
குற்றம் செய்யாமல்
தடுப்பது
இந்த சட்டமும்
தண்டனையும்

குற்றத்தை
தடை செய்யவே
வீதியெங்கும் ,
தெரு விளக்கும்
வீடு எங்கும்
கேமரா என்று
ஆயிற்று
இருந்தும்

அது
பல நேரம்
நடந்தது என்ன
என்று உணர்த்தவே
பயன்படுகிறது

எதற்காக நடந்தது
என்பதே அடுத்தகட்ட
ஆராய்ச்சிகள்

ஆடம்பர வாழ்வுக்கும்
ஆசைக்கு கட்டுப்பட்டுமே
நடக்கிறது இங்கு
பல குற்றங்கள்

இதில்
நீதிமன்றம் ஏறி
வாய்தாக்களில்
தாத்தாக்கள்
ஆயினோர் பலர்

பலவகை
குற்றங்கள்
பலவகை
சட்டங்கள்
இது எல்லாம்
அறிந்திருக்க வேண்டியதில்லை
நாம்

குறைந்த பட்சம்
சக மனிதனோடு
அன்பாய்
இருக்க
கற்றுக்கொள்வோமே

***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #25 on: September 19, 2024, 08:03:45 PM »
நான்

வாழ்வின் இடையில்
ஏறி வந்து
தட்டி எழுப்ப
ஓர் இடமாய்

எட்டிப்பார்த்து
செல்பவருக்கு
சிரிப்பதற்கான
ஓர் இடமாய் 

கல்லெறிந்து
வீழ்த்தும்
மாமரத்தின்
மாங்காயை போல
அடிவாங்கவும்

கதை சொல்லி
சொல்லி
தீர்த்துக்கொள்ளவும்

சத்தியத்தை
ஒளித்து வைக்கவும்

உடன் சுமக்க
ஒரு பொய்யும்

தலையில்
கட்டிவைக்க
ஓர் பாரமும்

நேரத்தை
கடத்த உதவும்
ஓர் வரி கவிதை
எழுதி வைக்க
ஓர் இடமுமாய்

மறந்துவிட வேண்டுமென்ற
தேவை இல்லாத

சிலநேரம்
மறக்கமுடியா
தேவையுமாய்

****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #26 on: January 31, 2025, 03:52:17 PM »

தென்றல் தாங்கி வரும்
தென்னையும்
விருந்துண்ண தன்னை தரும்
வாழையும்
சுற்றி இருக்க

ஆனந்தம் கொண்டாடும் வீடு

****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #27 on: February 01, 2025, 02:57:26 PM »

சுருக்கங்கள்
விழுந்த
வயதிலும்
சுருங்காத உன்
நினைவுகள்
என்றும்
மனதில்

****JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #28 on: March 08, 2025, 04:52:37 PM »

கொடியது மனம்
பாதி அழகை ரசிக்காமல்
மீதி அழகில்  வருந்தும்
மனம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1005
  • Total likes: 3278
  • Total likes: 3278
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள்
« Reply #29 on: March 10, 2025, 01:25:37 PM »

நீயாக நான்
நானாக நீ
என மாறிய பின்
மறைத்தல் என்பது
வெறும் கண்ணாமூச்சி
ஆட்டமே

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "