Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 115489 times)

Online Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #465 on: January 27, 2025, 02:22:39 PM »
செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,
வானகமும், ஆற்றல் அரிது.

பொருள்
என்ன? அப்படின்னு, பார்த்தோம்ன்னா, இப்ப, நம்ம வந்து, ஒருத்தவங்களுக்கு, எந்த உதவியுமே செய்யல. அப்படி இருக்கும்போது, அவங்க, நமக்கு, ஒரு உதவி செய்யறாங்க, அப்படின்னா, அந்த உதவிக்கு, கைமாறா, இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் குடுத்தா கூட ஈடாகாது.


« Last Edit: January 27, 2025, 04:23:13 PM by Thooriga »

Online RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #466 on: January 27, 2025, 03:49:43 PM »
Thooriga sis அடுத்து என்ன குறள் சொல்லுங்கள்

Online Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #467 on: January 27, 2025, 04:24:06 PM »
sorry anna

NEXT:

 ................கண்ணும்......................  ...................
 சுற்றத்தார் ....................உள

Online RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #468 on: January 27, 2025, 10:31:21 PM »
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள



ஒருவன் வறுமையானாலும், அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.


அடுத்த குறள்.   -------------- றுணராமை -------
உடன்மூவர்-------------தேறப் படும்.

Online Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #469 on: January 28, 2025, 10:30:54 AM »
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

NEXT:

----------- இல்லாதான் ---------------  ----------
மனக்கவலை --------- அரிது

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #470 on: January 29, 2025, 02:19:18 PM »
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும் 

NEXT 🌹............செல்லாத் துனியும் வறுமையும்..............

Online Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #471 on: January 29, 2025, 03:14:06 PM »
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்

Next: ..............அல்ல ................. ஒருவன்
................ ...............இனிது

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #472 on: January 29, 2025, 05:51:43 PM »
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது   


அறத்தைப் பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், ‘அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்’ என்பது இனிதாகும் 

NEXT 🌹......... என்னாம் ......... எலிப்பகை
நாகம் ....... கெடும்🌹
« Last Edit: January 29, 2025, 05:54:50 PM by Jithika »

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #473 on: January 30, 2025, 10:01:18 AM »
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்


கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா.  அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.





அடுத்த குறள்:
அறத்திற்கே ___________பென்ப ______
மறத்திற்கும் _______ _________



Offline VenMaThI

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #474 on: January 30, 2025, 02:23:03 PM »

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.


அடுத்து:

ஐந்தவித்தான் ____  விசும்பு ளார் _____
____ சாலுங் கரி.


Online Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #475 on: January 31, 2025, 03:41:37 PM »
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.


Next: ............பெருக்கி ................... உற்றவை
ஆராய்வான் ................... வினை

Online RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #476 on: February 01, 2025, 10:51:01 PM »
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக 


அடுத்த குறள்.     எனைவகையான் தேறிய ----------- வினைவகையான்
----------- மாந்தர் பலர்

Online Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #477 on: February 03, 2025, 05:23:09 PM »
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு

Next:
................ அந்தணன் .................... கல்லால்
பிறவாழி ..................... அரிது

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #478 on: February 07, 2025, 10:40:28 PM »
குறள் எண் : 8 அதிகாரம் : கடவுள் வாழ்த்து குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

குறளின் விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

NEXT 🌹பிறவிப்......... நீந்துவர் நீந்தார்.......... அடிசேரா ......🌹

Online RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #479 on: February 08, 2025, 04:02:37 PM »
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது



அடுத்த குறள்.      கோளில் -----குணமிலவே -----------------
தாளை ----------------- தலை