Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
படித்ததில் பிடித்தது..!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: படித்ததில் பிடித்தது..! (Read 1228 times)
KS Saravanan
Full Member
Posts: 241
Total likes: 613
Total likes: 613
Karma: +0/-0
Gender:
God is Love
படித்ததில் பிடித்தது..!
«
on:
November 27, 2024, 04:07:42 PM »
வெளிநாட்டு வாழ்க்கை
மனைவியின் அன்பையும்
குழந்தையின் குறும்பையும்
ஒரு சிறு தொலைபேசி என்னும்
பெட்டிக்குள்ளே பதுக்கி உள்ளேன்
நினைக்கும் நேரத்தில்
அவர்களின் நினைவுகளை
புகைப்படமாகவும் காணொளியாகவும்
கண்டு கொண்டிருக்கிறேன்
அருகில் இருந்திருந்தால்
அவர்களின் அரவணைப்பில்
வாழ்த்திருப்பேன்..!
என்ன செய்வது..
பொழப்பு தேடி
வெளிநாட்டிற்கு வந்துவிட்டேனே
அவர்கள் சிரித்தாள்
போதுமென வாழ்கிறேன்..!
படித்ததில் பிடித்தது..!
«
Last Edit: November 28, 2024, 12:45:30 PM by KS Saravanan
»
Logged
(5 people liked this)
(5 people liked this)
KS Saravanan
Full Member
Posts: 241
Total likes: 613
Total likes: 613
Karma: +0/-0
Gender:
God is Love
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #1 on:
December 01, 2024, 03:42:14 PM »
ஊதாங்குழல் இசைக்கும் அம்மா
நடனமாடுகிறது நெருப்பு..!
படித்ததில் பிடித்தது..!
Logged
(3 people liked this)
(3 people liked this)
Vethanisha
Hero Member
Posts: 726
Total likes: 1392
Total likes: 1392
Karma: +0/-0
Silence says so much♥️ Just listen
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #2 on:
December 04, 2024, 08:28:12 AM »
செங்கல் சுமந்து சென்ற சிறுவன்
சுவர் சுமந்த எழுத்துக்களை
படித்து விட்டு சிரித்தான்
"இளமையில் கல்"
படித்ததில் பாதித்தது
Logged
(5 people liked this)
(5 people liked this)
VenMaThI
FTC Team
Sr. Member
Posts: 265
Total likes: 1183
Total likes: 1183
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #3 on:
December 05, 2024, 11:19:32 AM »
படித்ததில் வலித்தது.....
ஆண் வாரிசு பெறுவதில் தோல்வியுற்று...
நலிந்து கிடக்கிறாள் அடுத்தடுத்து
"பெண் குழந்தைகளை ஈன்றவள்"
ஆண்மை குறைந்தவனை மணந்து...
அரச மரத்தில் தொட்டில் கட்டுகிறாள்...
"மலடி"
மங்கல காரியங்களில் மேடையில் நிற்கத் தயங்குகிறாள்...
"விதவை"
வயிற்றுப் பசிக்கு ஆண்களின் காமப்பசி தீர்த்து...
உணவைப் பெறுகிறாள்
"விபச்சாரி"
கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு
கணவனை அனுமதிக்காமல்...
தன்னை உட்படுத்திக் கொள்கிறாள்...
"வம்ச தர்மம் காப்பவள்"
சீர் கேட்கும் புகுந்த வீட்டிற்கும்...
கொடுக்க மறுக்கும் தாய் வீட்டிற்கும்...
நடுவே திரிசங்கு நரகத்தில் விழுகிறாள்...
"வாழாவெட்டி"
குடிகாரக் கணவனிடம் அடிபட்டு மிதிபட்டாலும்...
தியாகத்தின் புனிதம் காக்கிறாள்...
"பத்தினி"
வீட்டின் அக்கினி மூலையில் நாள் தோறும் தீக்குளிக்கிறாள்...
கல்வியில் தங்கம் வென்றிருந்த
"இல்லத்தரசி"
கணவன் வஞ்சித்து கை விட்ட பிறகு...
வேறு துணையோடு சேர்ந்து வாழுகிறாள்...
"நடத்தைக் கெட்டவள்"
தடைகளைத் தாண்டி வேற்று சாதிக் காதலனை மணந்ததால்...
ஒதுக்கப்படுகிறாள்
"ஓடுகாலி"
எத்தனைப் புரட்சிகள் வெடித்தாலும்...
இத்தனைப் பெண்களையும் உயிரோடு விழுங்கும் பூமி கொக்கரிக்கிறது...
"பெண் என்பவள் பூமாதேவி...
Logged
(9 people liked this)
(9 people liked this)
KS Saravanan
Full Member
Posts: 241
Total likes: 613
Total likes: 613
Karma: +0/-0
Gender:
God is Love
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #4 on:
December 21, 2024, 04:52:54 PM »
அமைதியாய் நான்
மாறிப்போனேன் உன்
வார்த்தைகளின் வலிகளால்
வாள் கொண்டு வீசும்
வலிதனை உன் வார்த்தைகள்
தரும் என உணர்வாயா..?
உன் போல் பேசும் வழிதனை
தெரியாமல், விழி நிறைந்து
நிற்கிறேன் ஊமையாய்..!
படித்ததில் பிடித்தது..!
Logged
(4 people liked this)
(4 people liked this)
KS Saravanan
Full Member
Posts: 241
Total likes: 613
Total likes: 613
Karma: +0/-0
Gender:
God is Love
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #5 on:
January 10, 2025, 04:12:11 PM »
புத்தியில்லாத மனைவி
கணவனை அடிமையாக்கி
தானும்
அடிமைக்கு மனைவியாக வாழ்கிறாள்
புத்தியுள்ள மனைவியோ
கணவனை ராஜாவாக்கி
அவளும் ராணியாக வாழ்கிறாள்..!
வாழ்க்கையில் ராஜாவாக வாழ பெருமைகொள்கிறேன்
படித்ததில் பிடித்தது..!
«
Last Edit: January 10, 2025, 04:19:11 PM by KS Saravanan
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
VenMaThI
FTC Team
Sr. Member
Posts: 265
Total likes: 1183
Total likes: 1183
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #6 on:
January 11, 2025, 06:43:13 AM »
படித்ததில் பிடித்தது
:
வாழ்கை வாழ்வதற்கே...
இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்
கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது
நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்
ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..
ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..
தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..
ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..
இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..
அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்
வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..
ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..
கண்டதை உண்டாலும் செரித்தது.
தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..
பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்
உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்
ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..
எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..
வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..
பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..
கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..
மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..
ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..
படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்
தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தான் நாம் உறங்கிய தருணம் கண்டோம்
பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய
பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..
அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..
பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...
காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..
பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்
ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்
செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்
ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது
தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்..
காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்
ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்..
ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..
மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..
மொத்தத்தில் அப்போது வாழ்ந்தார்கள்.. இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...
Logged
(4 people liked this)
(4 people liked this)
Thooriga
Newbie
Posts: 35
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Gender:
Varnajaalam
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #7 on:
January 13, 2025, 05:25:39 PM »
I was a queen in someone's Dream .. but I never wanted to live someones life...
I was always a priority to someone.. but that was only my imagination....
I was taught am not special... not a priority....
«
Last Edit: January 14, 2025, 10:59:24 AM by Thooriga
»
Logged
(2 people liked this)
(2 people liked this)
Thooriga
Newbie
Posts: 35
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Gender:
Varnajaalam
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #8 on:
January 14, 2025, 11:03:22 AM »
சிரிப்பு சத்தம் அதிகமாக இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒருவிதத்தில் உடைந்து போனவர்களாக இருக்கிறார்கள்
படித்ததில் பிடித்தது
«
Last Edit: January 21, 2025, 11:59:48 AM by Thooriga
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
KS Saravanan
Full Member
Posts: 241
Total likes: 613
Total likes: 613
Karma: +0/-0
Gender:
God is Love
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #9 on:
January 15, 2025, 10:02:18 PM »
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
அண்மையில் படித்ததில் பிடித்த திருக்குறள்..!
Logged
(2 people liked this)
(2 people liked this)
Thooriga
Newbie
Posts: 35
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Gender:
Varnajaalam
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #10 on:
January 21, 2025, 03:13:05 PM »
எந்த எதிர் பார்ப்பும் இன்றி மகுடம் சூடாத ராணியாக உன்மனதில் வாழ்வதை எண்ணி கர்வம் கொள்கிறேன்
படித்ததில் பிடித்தது
«
Last Edit: January 21, 2025, 03:17:58 PM by Thooriga
»
Logged
(1 person liked this)
(1 person liked this)
KS Saravanan
Full Member
Posts: 241
Total likes: 613
Total likes: 613
Karma: +0/-0
Gender:
God is Love
Re: படித்ததில் பிடித்தது..!
«
Reply #11 on:
January 23, 2025, 02:33:17 PM »
பேசாமல் இருக்கிறேனே தவிர
தொடர்பு கொள்ள முடியாமல் இல்லை...!
என்னை தொல்லையென
நினைத்துவிட விட
கூடாது என்பதற்காக..!
படித்ததில் பிடித்தது..!
«
Last Edit: January 23, 2025, 02:52:20 PM by KS Saravanan
»
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
படித்ததில் பிடித்தது..!