Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 34436 times)

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #195 on: June 06, 2024, 09:55:52 AM »
குறள் :195

  சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.


விளக்கம் :

   மு.வரதராசன் விளக்கம்:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.   

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #196 on: July 19, 2024, 07:50:49 AM »
குறள் :196

  பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.


விளக்கம் :

  சாலமன் பாப்பையா விளக்கம்:
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள் 

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #197 on: September 18, 2024, 06:27:31 AM »
குறள்:197[/ நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று


விளக்கம்

       
மு.வரதராசன் விளக்கம்:
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது. 

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #198 on: December 02, 2024, 08:50:15 PM »
குறள் :198   அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் 


விளக்கம்:

       மு.வரதராசன் விளக்கம்:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.   



Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #199 on: December 04, 2024, 08:23:30 AM »
குறள் 199   பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.


விளக்கம்:

  சாலமன் பாப்பையா விளக்கம்:
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.   

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #200 on: December 23, 2024, 07:42:57 AM »
குறள்: 200

  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.   
]


விளக்கம்:

 
 மு.வரதராசன் விளக்கம்:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.   

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #201 on: December 24, 2024, 07:47:58 AM »
குறள் : 201

அதிகாரம் : தீவினையச்சம்

   தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.


விளக்கம்:

     
 கலைஞர் விளக்கம்:
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். 

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #202 on: December 25, 2024, 06:39:00 AM »
குறள் 202

  தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 


விளக்கம்:

 
 மு.வரதராசன் விளக்கம்:

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.     

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #203 on: January 05, 2025, 08:53:11 AM »
குறள் :203         

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.     


[விளக்கம்:

   
.   
 சாலமன் பாப்பையா விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
« Last Edit: January 07, 2025, 06:38:20 AM by mandakasayam »

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #204 on: January 07, 2025, 06:36:47 AM »
குறள் : 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 


விளக்கம்:

     
 சாலமன் பாப்பையா விளக்கம்:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
« Last Edit: January 07, 2025, 06:38:46 AM by mandakasayam »

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #205 on: January 12, 2025, 08:00:54 AM »
குறள்:205
   இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.


விளக்கம் :

  சாலமன் பாப்பையா விளக்கம்:

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய் 

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #206 on: January 14, 2025, 08:56:12 AM »
குறள்:206
  தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான் 
[

விளக்கம்:

      கலைஞர் விளக்கம்:

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்   

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #207 on: January 24, 2025, 07:23:40 AM »
குறள் :207       எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.   


விளக்கம்:

     
 சாலமன் பாப்பையா விளக்கம்:
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்