பெண் காது.
சிறுவயதில் இருந்தே சம்பவங்கள், சுவாரஸ்யங்கள், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உரையாடல் என வாயின் எண்ணற்ற சொல் வெளிப்பாடுகளை அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி, மகள்… என ஏதாவது ஒரு பெண்ணின் காதுகளுக்குக் கடத்துவதில்தானே விருப்பமாக இருக்கிறோம். நிச்சயம் வெளியேறும் எனத் தெரிந்தும் பெண் காதுகளிடம் தானே ரகசியயங்களையும் பரிமாறிக் கொள்கிறோம்.
அதனால்தானோ என்னவோ… பெண்ணின் காதுக்கு மட்டுமே அவ்வளவு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள். தோடு, தொங்கட்டான், திருகு, முதுமையில் சமணர்ளைப் போல் தொங்கு காது வளர்த்து தண்டட்டி, பாப்படம், காது உச்சியில் கோபுரம் என அணியும் பூடி.. வேறு எந்த நுண்உறுப்புக்கும் இவ்வளவு அணிகலன்கள் இல்லையே. வறுமையின் உச்சத்தில் இருக்கும்போதுகூட பெண் காதிடம்தானே கழற்றித் தரச்சொல்லிக் கேட்கிறோம்.
ஆதாரம்: பெண் காது – நரன் – சிறுகதை – விகடன் தடம் – இதழ் - பக்கம் ; 87.