Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Yes
2
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on January 24, 2025, 06:29:51 PM »
8
வணக்கம் RJs & DJs,

இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி.இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்



கர்ணன்

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற சமூகநீதி , சுயமரியாதை மற்றும் வாழ்வுரிமை அரசியல் பேசும் ஆகச்சிறந்த திரைப்படம்

நடிகர்கள்: தனுஷ், லால், நடராஜன், ரஜிஷா விஜயன்
இயக்கம்: மாரி செல்வராஜ்
இசை: சந்தோஷ் நாராயணன்

இப்படத்தில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது

கண்ட வர சொல்லுங்க பாடல்

வரிகள்: மாரி செல்வராஜ்
குரல்: கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாரயணன் 



பிடித்த வரிகள்:

கவசத்தையும் கண்டதில்ல…
எந்த குண்டலமும் கூடயில்ல
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை

300 வாரங்களாக இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் FTCடீமிற்கும், இசைத் தென்றலின்  RJக்களுக்கும், DJக்களுக்கும் நன்றியும், வாழ்த்துகளும். நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவும் தரும் FTCயின் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடலை டெடிக்கேட் பண்றேன்.

நன்றி.
9
கவிதைகள் / சென்னை!
« Last post by joker on January 24, 2025, 03:33:54 PM »


இப்போதெல்லாம்
சென்னை மாறிவிட்டதாம்

சாலையின்
எல்லா சந்திப்புகளிலும்
இப்போதெல்லாம்
புதிய சிக்னல் விளக்குகள்
பளபளக்கிறது

சிக்னலில் சிவப்பு விளக்குகள்
இதய வடிவ குறியீடாய்
ஒளிர்கிறது
காதல் அபாயமானது என்று
உணர்த்திகிறதோ என்று நினைத்தேன்
அது
உங்களை நேசிப்பவர்கள்
வீட்டில் உள்ளனர் என்று நினைவில்
கொள்ள என்கிறது அரசு
என்ன ஒரு அக்கறை ?!

அதே சிக்னலில்
கையில் நோட்டுப்புத்தகத்துடனும்
பேனா பென்சில் என்று விற்க
பள்ளிக்கு போகும் வயதுடைய
சிறு பிள்ளைகள் கை ஏந்தி நிற்க
அரசின் அக்கறை யார் மேல் என
யோசிக்க வைக்கிறது

நேற்று வந்த பாதை
இன்று  ஒரு வழி பாதை ஆகிறது
முன்பு ஆட்டோ காரருக்கு மட்டும்
தெரிந்த சந்துக்குள் இன்று
அனைவர்க்கும் அத்துப்படி
மெட்ரோ ரயில் பணிக்கு நன்றி
கூடவே google மேப் க்கும்
சில நேரம் வீடு போயி சேர
உதவுவதால்
நன்றிகள்

உலக தர
மருத்துவமனை
உலக தர
நூலகம்
உலகின் இரண்டாவது
மிக நீளமான
கடற்கரை
பூங்காங்கள்
ரோட்டோர உணவகங்கள்
இரவிலும், நடுநிசியில்,அதிகாலையிலும்
திறந்திருக்கும் பிரியாணி கடைகள்
அங்கங்கே உலகத்தில் உள்ள
அணைத்து உணவுகளையும்
கொண்டுள்ள உணவகங்கள்

கால சுயற்சியில் சிக்குண்டு
கிடைக்கும் மாந்தர்களை போலதான்
இந்த சென்னையும் அவ்வப்போது
மாறிக்கொண்டிருக்கிறது
ஆனால்
மாறாமல்
அன்றும் இன்றும் என்றும்
வந்தோரை
வாழ வைக்கும்
சென்னை



****JOKER****
10
GENERAL / Re: Vivekanandar 😇
« Last post by Vethanisha on January 24, 2025, 01:25:55 PM »
Pages: [1] 2 3 ... 10