Author Topic: விண்வெளியில் தங்கம்  (Read 372 times)

Offline mandakasayam

விண்வெளியில் தங்கம்
« on: December 18, 2024, 07:46:21 PM »
விண்வெளியில் தங்கம்

   தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்க, விண்வெளியில் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். இந்த விண்கல்லை மட்டும் கொண்டு வந்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவரையும் பல லட்சம் கோடிக்கு அதிபதியாக்கிவிடலாமாம். முழுக்க தங்கத்தால் ஆன இந்த விண்கல் பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது. பூமிக்கு நெருக்கமாக வருமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வை தொடங்கியிருக்கிறார்கள்.
 

   விண்வெளியில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு பேரதிசயங்கள் உள்ளன. சூரிய குடும்பத்தில் பூமியை போல வேறு கிரகங்கள் உள்ளதா? என்பது முதல் சூரிய குடும்பத்திற்கு அப்பால் வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கிறதா? என்பது வரை விஞ்ஞானிகள் பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இது தொடர்பான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
   பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள் உள்ளிட்டவற்றையும் நாசாவின் ஒரு பிரிவு விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து அலர்ட் செய்து வருகிறார்கள். இதனிடையே, சூரிய குடும்பத்தில் சுற்றி வரும் சிறிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோள் முழுவதும் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், இந்த கோளை தங்க கிரகம் என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.    1852 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானி அன்னிபாலே டி காஸ்பரிஸ் என்பவர் இந்த விண்கல்லை முதன் முதலில் கண்டறிந்தாராம்.


  அப்போது இந்த கிரகம் முழுவதும் தங்கம் இருப்பதை யாரும் அறிந்து இருக்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு இந்த கிரகத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போதுதான், இந்த கிரகம் முழுவதும் தங்கமாய் ஜொலிப்பது தெரியவந்துள்ளது. இந்த விண்கல்லிற்கு 16 Psyche என பெயரிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கும் வியாழன் கிராகத்திற்கும் இடையே சென்று இந்த விண்கல் சூரியனை சுற்றி வருகிறது.
 இந்த விண்கல்லின் மையப்பகுதி நிக்கல் மற்றும் இரும்பு தாதுவால் ஆனது. இந்த கிரகத்தின் இதயமாக இது கருதப்படுகிறது. Psyche விண்கல்லானது சூரியனை ஒருமுறை சுற்றி வர 5 ஆண்டுகள் ஆகும். தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 4 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. அதாவது இந்த விண்கல்லில் ஒருநாள் என்பது சுமார் 4 மணி நேரம் ஆகும். இந்த விண்கல்லில் இருக்கும் மினரல்களின் மதிப்பு பல டிரில்லியன்களை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.   


   இந்த விண்கல்லில் இருக்கும் மொத்த தங்கத்தையும் எடுத்து வந்தால் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரையும் 93 பில்லியன் டாலருக்கு அதிபதியாக்கலாம். அதாவது, ரூ.76,300 கோடி ரூபாய் ஒவ்வொருவருக்கும் கொடுக்க முடியுமாம். இந்த விண்கல்லை முழுமையாக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி நாசா விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. வரும் 2029 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விண்கலம், Psyche -க்கின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும்.


  மொத்தமும் தங்கம் நிரம்பியிருக்கும் இந்த விண்கல்லில் மொத்த மதிப்பு சுமார் $100,000 குவாட்ரில்லியன் என கணக்கிடுகிறார்கள். அதாவது, 8,441 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்டதாம். தங்கம் மட்டும் இன்றி பிளாட்டினம், பல்லேடியம் போன்ற விலை மதிப்பு மிக்க அரிய கனிமங்களும் இதில் உள்ளன. இந்த விண்கல்லின் அளவு என்றால் சுமார் 220 கிலோ மீட்ட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளதாம். இந்த தங்க கோளை பூமிக்கு தூக்கிட்டு வந்தால்தான், ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் தங்கத்தின் விலையை தடுத்து நிறுத்தலாம் போல...


russian photo sharing