Movie name - பாசமலர்
Music Director - M.S.விஸ்வநாதன்
Singers - P.சுஷீலா & T.M. சௌந்தரராஜன்
பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே
ஆண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா
ஆண் : { அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு } (2)
வாழப் பிறந்தாயடா
பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்
பெண் : மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக
{ உலகை விலை பேசுவார் } (2)
பெண் : { மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக } (2)
உலகை விலை பேசுவார்
ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே
ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே
பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா
பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)
ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா
ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா
பெண் : அன்பே ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
I dedicate this song to all the siblings who are blessed with brothers and sisters..!