Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 162238 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Evil

sangam naa thalaivar irukkanum it naa evil irukkanum  samyooo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால



Offline RajKumar

Hi  RJ  &  DJ
இந்த வாரத்திற்கான இசை தென்றல் எனக்கு பிடித்த திரைப்படம்
பாண்டவர் பூமி
2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும் , இது சேரன் எழுதி இயக்கியது. இந்த படத்தில் அருண் விஜய் ஷமிதா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர் .
வினு சக்ரவர்த்தி மற்றும் முகேஷ் திவாரி நடித்தனர், சந்திரசேகர் , ரஞ்சித் , மனோரமா மற்றும் சார்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.  சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் , இரண்டாவது சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் வென்றது.
ஒளிப்பதிவு
தங்கர் பச்சன்
இசையமைத்தவர்
பரத்வாஜ்

இந்த படத்தில் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன

எனக்கு பிடித்த பாடல்
"தோழ தோழ கனவு"
பாடல் வரிகள்     சினேகன்
பாடகர்கள்.   சித்ரா, சிவராமன், யுகேந்திரன்

பிடித்த வரிகள்
புரிதலில் காதல்
இல்லையடி பிரிதலில்
காதல் சொல்லுமடி காதல்
காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல்
வளருமே
பிரிந்து போன
நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை
சொல்லும் பிரியமான
காதலும் கூட பிரிந்தபின்
ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்

இந்த பாடலை FTC தோழர் மற்றும் தோழி களுக்கு delicate செய்கிறேன்
« Last Edit: June 19, 2025, 11:53:20 PM by RajKumar »








Offline Isai


Offline Wonder Girl

Wonder girl