Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
அரிசந்திரனும் நானும்....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அரிசந்திரனும் நானும்.... (Read 231 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221666
Total likes: 27325
Total likes: 27325
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
அரிசந்திரனும் நானும்....
«
on:
June 03, 2025, 10:35:17 AM »
வேலைவிசயமாக வெளியில் இருக்கும்போது மனைவியிடமிருந்து போன் எங்கயிருக்கீங்க.? ஏதோ பக்கத்திலேயே இருந்து பாக்குறமாதிரி கேப்பா...
நானும் நாலுபக்கமும் பாத்துட்டுதான் பதில் சொல்லுவேன் .. பக்கத்திலதான் இருக்கேன் வந்துடுவேன்னு...
ஏன்னா நான் எந்த இடத்த சொன்னாலும் அங்க வாங்கறத்துக்குன்னே ஒரு சாமான் லிஸ்ட் வைச்சிருப்பா.. மாத்தி வாங்கிட்டா ஏங்க அங்கயிருந்தீங்க அங்க வாங்கினாதா அந்த பொருள் நல்லாயிருக்கும்... அப்ப நீங்க அங்கயில்லையான்னு கேள்வியாலேயே துளைச்சிடுவா...
கொஞ்ச நேரத்தில மககிட்டேயிருந்து போன் அப்பா எங்க இருக்கே...?
பத்து நிமிசத்தில வந்துடுவேன்னு சொன்னேன்...
பறந்தே போனாலும் பத்து நிமிசத்தில போகமுடியாதுன்னு தெரியும்..
வீட்டுக்கு போறதுக்கு இரண்டுமணி ஆச்சு...
'ஏங்க எங்கே இருக்கேன்னு உண்மையதான் சொல்லிட்டு போங்களேன்.. ஏன் பொய் சொல்லணும்?' மகளும் 'ஏம்பா சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பொய் சொல்லனுமா' என்று கேட்க எனக்குள் இருக்கும் அரிசந்திரன் முழித்து கொள்ள ஆரம்பித்தான்..
ரொம்ப நேரம் யோசித்தேன்.. மகளிடம் இனிமே நான் எதுக்காகவும் பொய் சொலல போறதில்லை.. உண்மை மட்டுமே பேச போகிறேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னேன் ..
'வேண்டாம்பா நீ பிசினஸ் செஞ்சுகிட்டு இருக்கே சமயத்திலே சின்ன சின்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டிருக்கும் முடிவை மாத்திக்கோ... இல்லேன்னா கஷ்டப்படுவே...' என்று உள்ளுணர்வு சொன்னது.
நான் தீர்மானமாக சொன்னேன் யார் தடுத்தாலும் நான் அரிசந்திரனாய்தான் இனி மாற போகிறேன் இது சத்தியம் ....
விதி யாரை விட்டது.?
இரவு நிம்மதியா தூங்கினேன்..
காலை எழுந்ததும் மனைவி காப்பி கையில குடுத்துட்டு 'குடிச்சி பாருங்க எப்படியிருக்குன்னு திக்கா டிகாஷன் போட்டிருக்கேன்'..
ஒரு மடக்கு குடித்தேன் மயக்கமே வந்தது... காப்பிதூள்ள போட்டாளா இல்ல சீயக்காய் தூளா?
மகள் போர்வைகுள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் "அப்பா இன்னையிலிருந்து நீ அரிசந்திரனாய் மாறிட்டே உண்மை பேசு.."
ஐயோ... ஆமால்ல இப்ப என்னோட மூஞ்சயே பாத்துகிட்டு இருக்கிற இவகிட்ட என்ன சொல்றது....?
'வாந்தி வருது'ன்னு உண்மையை சொன்னா நாளையிலிருந்து காலையில கிடைக்கிற சுடு தண்ணிக்கும் வேட்டு வைச்சுகிட்ட மாதிரி ஆகிடும் அரிசந்திரா இது என்ன சோதனை ..
சரி சரி இதுக்கே பயந்தா எப்படி.?
"நல்லாயில்லைடி" என்று உண்மையை சொன்னேன்..!
'காலையிலே எழுந்து சூடா காப்பி போட்டு முதல்ல கொண்டு வந்து கொடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ...
இனிமே நீங்களே காப்பி போட்டு குடிச்சிட்டு எனக்கும் கொடுங்க அப்படியே டிபனும் செஞ்சுக்கங்க..' அவளின் சாபத்தோடு தொடங்கியது இனிய காலை..?
ஒரு வழியாய் காலை கடன்களை முடித்து வெளிய கிளம்பினேன்..
வாசலிலேயே பின் வீட்டுகாரன் வர அதிர்ந்தேன்... பொய்சொல்லி கடன் வாங்கி மது அருந்துவதில் கில்லாடி பணமும் அவ்வளவு சீக்கிரம் திரும்ப வராது..
அடுத்த சோதனை ஆரம்பமானது...
மோகன் சார் ரொம்ப அர்ஜென்டா ஐநூறுரூபாய் தேவைப்படுது.. கேஸ்க்கு குறையுது ஏடிஎம் கார்டை எங்கே வைச்சுட்டேன்னு தெரியல கையில கிடைக்கல நாளைக்கே திரும்ப கொடுத்துடறேன்....!
நிமிர்ந்து பார்த்தேன் மாடியிலிருந்து என் பொண்ணு என்னைப்பார்த்து நக்கலாய் சிரிப்பதுபோல இருந்தது..
பாக்கெட்டில் இருந்த ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தேன் கண்டிப்பா நாளைக்கு கொடுக்கணும்னு சொல்லி... வராதுன்னு தெரியும்..!
திடீரென தாரைதப்பட்டை சத்தம் காதை துளைக்க எதிரே வந்தவரிடம் என்னவென்று கேட்டேன் பக்கத்து தெருவில் இருக்குற சுப்பிரமணியோட அப்பா இறந்துட்டாராம்.. ரொம்ப நல்ல மனுசனாச்சே நல்லா பழக்கம் வேற மற்ற வேலைகளை தள்ளிவைத்துவிட்டு சாவுவீட்டை நோக்கி போனேன்..
இறுதிசடங்களை முடித்து மயானத்துக்கு கிளம்ப மற்றவர்களோடு நானும் சுடுகாட்டுக்கு போனேன்.. அங்கு இறுதி காரியங்கள் நடந்து கொணடிருக்க என் செல்போன் அழைக்க ஆரம்பித்தது..
சுடுகாட்டை பார்த்ததும் அரிசந்திரன் ஞாபகம் ஞாபகபடுத்தாமலே வந்து போனது...
போனை எடுத்து பார்த்தேன் என் மாமியார் தான்.. மாப்ளே எங்கயிருக்கீங்க..!
சுடுகாட்ல இருக்கேன்...
திட்டிகொண்டே போனைகட் செய்வது தெரிந்தது...
என்னாச்சி உண்மையைதானே சொன்னேன் ஒண்ணும் புரியல..!
திரும்ப போன் பெல்அடிக்க இப்ப மாமனார்... மாப்ளே எங்க இருக்கீங்க அமைதியாதான் கேட்டார்...
நான் சுடுகாட்ல இருக்கேன்...
பொறுமையாதான் சொன்னேன்...
அவரும் போனை வைத்துவிட்டார் வைக்கும்போதே திட்டுவது தெரிந்தது...
என்னாச்சி இருக்கிற இடத்த சொன்னது தப்பா..? இல்ல சுடுகாட்ல பேசகூடாதுன்னு பேசலையா.? அதுக்கு எதுக்கு கோபப்படணும்.? யோசித்து பார்த்தேன் புரியல...!
வீட்டுக்கு திரும்பினேன் குளித்துவிட்டு வேற வேலையை பார்க்க போகணும்...
வாசலிலேயே மனைவி தலைவிரி கோலமாய் கோபமாய் நின்றிருக்க என்ன ஆச்சு... காபி நல்லாயில்லன்னு சொன்னதற்க்கா இன்னும் கோபம் குறையல..?
எங்கிருந்து வர்றீங்க...
சுடுகாட்லேந்துதான் வர்றேன்...
அவ்வளவுதான் ரூத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டாள் ...
எங்க குடும்பத்த பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது முக்கியமான விசயம் பேசணும்னு எங்க அப்பா அம்மா போன் செஞ்சு கேட்டா கோபமா சுடுகாட்ல இருக்கேன்னு சொன்னீங்கலாம் அவ்வளவு எளக்காரமா போச்சா .? பொண்ண கொடுத்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா.? வயசுக்காவது ஒரு மரியாத வேண்டாம்.. இப்ப நான் கேட்டாலும் அதையே சொல்றீ்ங்க...
அட பாவத்த உண்மையை சொன்னதற்கா இவ்வளவு ஆர்பாட்டம்...
கடவுளே நடந்த விசயத்தை சொல்லி புரிய வைக்க மகளும் அவளும் குப்புறவிழாத குறையா சிரிக்க ஆரம்பிக்க..நான் யோசிக்க ஆரம்பித்தேன்....
சிலமணி நேரங்களிலேயே தாக்கு பிடிக்க முடியலையே வாழ்நாள் முழுதும் அப்படி இருந்தா.?
அரிசந்திரா நீ நீதான் உனக்கு போட்டியில்லை.. போடவும் முடியாது.!
அரிசந்திரனாய் வாழ்வது என்பது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமே இல்லை... சின்ன சின்ன பொய்களால்தான் இந்த வாழ்க்கை அழகாய் நகர்கிறது..
பொய் சொல்ல மாட்டேன் என்பதைவிட யாருக்கும் பாதிப்பில்லாத யாரையும் காயப்படுத்தாத நம்மையும் பாதிக்காத பொய்களை சொன்னால் தவறில்லை...
மன்னிச்சுக்கோ அரிசந்திரா.... உன்னுடன் போட்டி போட நினைச்சேனே..
உன் புகழ் உனக்கே உரிதானது..
மற்றவர்களுக்கு அரிதானது..!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
அரிசந்திரனும் நானும்....